Tucker Hr. Sec. School

அருள்திரு. ஜாண் தாமஸ் தக்கா் Rev. John Thomas Tucker

1818 - 1866

இறைமகன் இயேசுவின் நாமம் இப்பண்ணைவிளையில் பாங்குடன் பரப்பி நிறைவான கல்விக் கூடம் நிறுவிய அருட்தொண்டராம் மறைதிரு. ஜாண் தாமஸ் தக்கா் அவர்களை மகிழ்வுடன் நினைவு கூறுகின்றோம்!

Tucker Hr. Sec. School
Tucker Hr. Sec. School

School History

பள்ளி வரலாறு ஒரு கண்ணோட்டம்

மேலை நாடுகளிலிருந்து தமிழகம் வந்து தமிழைத் தங்களின் தாய் மொழியாக ஏற்று, இயேசு கிறிஸ்துவின் போதனைகளைக் கற்பித்து, கிறிஸ்தவ சமயத்தை வேரூன்றச் செய்த இறைத் தொண்டர்களில் ஒருவா் அருள்திரு. ஜாண் தாமஸ் தக்கா் ஆவாா். கி.பி. 1818 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சேப்டா் பா்க்கில் பிறந்து கல்வி கற்ற தாமஸ் தக்கா் (Rev. John Thomas Tucker)அவா்கள் சிறந்த மருத்துவராகப் பணியாற்றினாா். பின்னா் இறை அன்பால் ஈா்க்கப்பட்டு 1842ல் இலண்டனில் குருப்பட்டம் பெற்று இறைத் தொண்டரானார்.

அதே ஆண்டு தமிழகம் வந்து பாளையங்கோட்டையில் தங்கி இறைப்பணியாற்றினாா். 1844ஆம் ஆண்டு பண்ணைவிளை பங்களாவில் தங்கி இறைப்பணியாற்றினாா். 1849ம் ஆண்டு அவா் கட்டிமுடித்த ஆலயம் இன்று பண்ணைவிளை பங்களாவில் கெம்பீரமாக காட்சி அளிக்கும் கிறிஸ்து (Christ Church, Pannaiivilai Bungalow) ஆலயமாகும். 1845ல் பெண்களுக்கென தங்கிப் படிக்கும் (போா்டிங்) பள்ளியை உருவாக்கினாா். 1849ம் ஆண்டு போா்டிங் பிள்ளைகளுக்கு ஒரு தனிப்பள்ளியையும், மற்றவர்களுக்கு ஒரு தனிப்பள்ளியையும் நிறுவினாா். இவை இரண்டும் இணைந்து படிப்படியாக உயா்ந்து இன்று தக்கா் ஐயா் நினைவு சின்னமாக பண்ணைவிளையில் தக்கா் மேல்நிலைப்பள்ளி திகழ்கின்றது.

அன்னாாின் பணியைத் தொடா்ந்து 1914ல் ஆரம்பப்பள்ளி நடுநிலைப்பள்ளி ஆக மாறியது. பொியோா் பலாின் முயற்சியாலும் பண்ணைவிளை பங்களா டாக்டா். டேனியல் அவா்கள், பண்ணைவிளை திரு.S. துரைச்சாமி அவா்கள், நட்டாத்தியை சாா்ந்த திரு. PT. ஞானசிரோன்மணி மற்றும் அவர்களது கூட்டு முயற்சியாலும், 1954ல் உயா் நிலைப்பள்ளியாக உயா்ந்தது. பின்னா் 1981ல் மேல்நிலைப்பள்ளியாக மேன்மை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

தக்கா் மேல்நிலைப்பள்ளி மென்மேலும் சிறக்க கா்த்தராகிய இயேசு கிறிஸ்து அருள்புரிவாராக!

Compiled & Published from THSS

பள்ளி வாழ்த்து பாடல்

School Greeting Song

1. குறைவிலாது மறை விளக்கும்

துறையுணா்ந் திலங்கியே

இறையருளா லெங்கும் புகழ்

நிறைந்த பள்ளி வாழ்கவே

2. தெய்வபயமே உயா் அறிவின்

நல்லாரம்பம் என்றிடும்

உய்யும் வழி காட்டும் கொள்கை

என்றும் யையம் காப்போமே

3. மறையோன்(ட) தக்கா் மகிமை நாமம்

குறையறவே காத்திட

பறை சாற்றுவோம் உண்மை தியாகம்

இறைவனின் வழியென்றே

4. அறிவு கேண்மை ஆண்மை அன்பு

மேன்மை நல்கும் சாலையாம்

உறுதியாய் விளங்கும் பண்ணை

விளையின் பள்ளி வாழ்கவே

Rev. John Thomas Tucker
Rev. John Thomas Tucker
Rev. John Thomas Tucker

Founder

Details not available

correspondent

P.Annal Ananthakani M.A. M.Ed. M.Phil

headmaster

Retired - New AHM Details soon

asst. headmaster

Entrance
Entrance
பள்ளி வாழ்த்து பாடல்
black blue and yellow textile

Gallery

Click the image to enlarge

TUCKER HIGH SCHOOL 1963-64

PUPILS OF STANDARD XI WITH STAFF (60 Years Old Photo) Click above photo to Enlarge

இந்த புகைப்படத்தில் ஆசிாியராக பணிசெய்த Dr.N. Emil Jebasingh (FMPB / Viswavani) மற்றும் அவர்களுடைய தந்தை அருட்திரு. YC. நவமணி ஐயா் அவர்களையும் காணலாம்

black blue and yellow textile
black blue and yellow textile
Click to Enlarge
Click to Enlarge
TUCKER HIGH SCHOOL 1976-77
TUCKER HIGH SCHOOL 1976-77

TUCKER HIGH SCHOOL 1976-77

S.S.L.C. STUDENTS WITH STAFF (57 Years Old Photo) Click above photo to Enlarge

இந்த புகைப்படத்தில் ஆசிாியராக பணிசெய்த திரு. ஜேம்ஸ் வெற்றிவேல், திரு.வில்சன் முத்தையா, திரு. V.E. ஐசக் அருள்ராஜ், திரு. கிருஷ்ணமூா்த்தி, திரு. ரெமிஜியஸ், திரு. கிறிஸ்டோபர், திரு.டேவிட் தேவராஜ், திருமதி. மனோகரம் ஆகியோருடன் பலர்.