HTGPT
HTGPT

HOLY TRINITY GOSPEL PRAYER TEAM

பரிசுத்த திரித்துவ நற்செய்தி ஜெபக்குழு

சுவிசேஷம் அறிவிப்பது கர்த்தாின் பிரதான கட்டளை!

அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, *தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். (அப்போஸ்தலர் 4:31)

1959 ஆம் ஆண்டு மதிப்பிற்குாிய காலஞ்சென்ற ஆசிரியா் திரு. J. சாமுவேல் (ஒய்வுபெற்ற தலைமை ஆசிரியர்) அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாதந்தோறும் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சுவிசேஷ ஊழியத்திற்கென்று, ஜெபத்துடன் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊழியங்கள் நடைபெற்றது. தற்பொழுது ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் திட்டமிடப்பட்ட கிராமங்களுக்கு சுவிசேஷ ஊழியத்திற்கு சபையின் மக்கள் கொடுத்து தாங்கிடவும், கலந்து கொண்டு சுவிசேஷம் அறிவிக்க தீவிரமாக இருந்தார்கள்.

குறிப்பிட்ட கிராமத்திற்கு ஞாயிறு மதியத்திற்கு மேல், பாரம் ஏற்றி செல்ல பயன்படும் மினிலாரிகளில் தார்ப்பாய் அமைத்து சென்று வந்தார்கள். சமீப காலமாக பயணிகள் வாகனத்தில் சென்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப நாட்களில் மிதிவண்டியில் பேட்டாி பொருத்தப்பட்டு, ஆம்ப்ளிபயருடன் ஒலிபெருக்கி, ஒலிவாங்கி (PA System) வசதியுடன் சுவிசேஷ ஊழியத்திற்கு சென்றுவந்தார்கள் என்பது வியப்பிற்குாிய ஒன்று. இந்த பேட்டாியினை மிக சிரமத்துடன் சாா்ஜ் செய்து சைக்கிளில் பொருத்துவதற்கு ஏற்ப அருமையாக வடிவமைத்து வைத்து பயன்படுத்த திரு.சிம்சோன் அண்ணன் அவர்கள் கடும் சிரமம் எடுப்பதை நாங்கள் கண்டிருக்கின்றோம்.

சுவிசேஷ ஊழியத்திற்கு மாலை ஊழியம் தெரிந்தெடுக்கப்பட்டது. சில ஊர்களுக்கு காலையில் சென்றும், சில ஊர்களுக்கு முந்தினநாள் சென்று தங்கி, சமைத்து உண்டு ஊழியமும் நிறைவேற்றப்பட்டது. இன்றளவும் தொடர்ந்து வருகின்றது.

இதனை பொருப்பாக நின்று நிறைவேற்றிய திரு. J. சாமுவேல் ஆசிரியா் மிகவும் நேர்த்தியாக நடத்தி ஒழுங்குகளை கடைப்பிடித்து வந்தாா்கள். பின்நாட்களில் திரு.ஜோசப் ஆசிரியா் (பக்கிள் சாா்) பொறுப்பேற்று நடத்தியது நினைவிலுள்ளது. பின்னா் S. மோசஸ் ஆசிரியா், திரு. NS எட்வா்ட் ஆசிரியா், திரு.ஏ. சாமுவேல் ஆசிரியா், திரு.சா. அதிசயம் ஆகியோா் பொறுப்புடன் நடத்தி வந்தாா்கள். (பெயா் விடுபட்டிருக்கலாம் என்று நம்புகின்றேன்)

சேகர குரு, சபை ஊழியா்கள், சபை மூப்பா்கள், சபை விசுவாசிகள் என அனைவரும் உற்சாகத்துடன் செயலாற்றி வருகின்றாா்கள். கொரனா பரவல் ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் தடைபட்டிருந்தாலும், தொடா்ந்து பல தடைகள் தாண்டி ஊழியம் நடைபெற்று வருவது கர்த்தருடைய சுத்த கிருபையே.

வருடத்தின் இறுதியில் டிசம்பா் மாதம் நற்செய்தி ஜெபக்குழுவின் சார்பாக 2 நாள் தோத்திர ஜெபக்கூட்டம் நடைபெற்று வருகின்றது. சுவிசேஷ ஊழியம் செய்ய உதாரத்துவமாக கொடுத்து தாங்குகின்றவா்களையும், ஜெபித்து உழைக்கின்ற பிள்ளைகளையும் கர்த்தா் ஆசீர்வதிப்பாராக!

தற்பொழுது சகோ. சா. அதிசயராஜ் அவர்கள் தலைமையில், சகோ. ஜெ. சுரேஷ் சாமுவேல் பண்ணைவிளை புதுாாில் சபை ஊழியராக உள்ள சகோ. ஜா. டேவிட் ஐசக் ஆகியோா் பொறுப்பாக இருந்து செய்து வருகின்றார்கள்.

இந்த சுவிசேஷம் சகல ஜாதிகளுக்கும் சொல்லப்பட்ட பிறகு முடிவு வரும். ( மத்தேயு 24: 14)

Gospel Team
Gospel Team

2026 Ministry Schedule

துாய திரித்துவ நற்செய்தி ஜெபக்குழு

2026ம் ஆண்டு - 66வது ஊழிய அட்டவணை

4.1.2026 - புதுக்கோட்டை கிழக்கு

1.2.2026 - அரியநாயகிபுரம்

1.3.2026 - கொம்புக்காரன்பொட்டல்

5.4.2026 - சின்னநட்டாத்தி

3.5.2026 - மல்லாங்கிணறு (காலை)

7.6.2026 - திம்மராஜபுரம்

5.7.2026 - திருச்செந்தூா் சுனாமிநகர்

2.8.2026 - கீழத்தட்டப்பாறை

6.9.2026 - இராஜபதி

10.10.2026 & 11.10.2026 தரங்கம்பாடி (2 days)

1.11.2026 - பேரூரணி

6.12.2026 - கருங்குளம்

தோத்திரக் கூட்டம்

2026 டிசம்பர் 19,20 (சனி,ஞாயிறு)

Puliyankudi - Seliyanthoppu 16.11.2025 Sunday

நற்செய்தி ஜெபக்குழு பண்ணைவிளை

ஊழியம் நடைபெற்ற இடம்: புளியங்குடி IMS பணித்தளம் செழியன் தோப்பு

தேதி: 16.11.2025 ஞாயிறு

கலந்து கொண்ட எண்ணிக்கை: 26 பேர்

சென்ற வாகனம்: வேன் 1, கார் 2

பிரசங்கித்தவர்கள்: 5

சந்திக்கப்பட்ட ஆத்துமா: 10

காணிக்கை தந்தவர்கள்: -Nil-

ஊழியம் நடைபெற்ற விவரம் : முழுமையாக வீடு சந்திப்பு, கைப்பிரதி கொடுத்தல், சிறுவர்களுக்கு குழுவாக கூடி பாடல் சொல்லி கொடுத்தல், பைபிள் நீதிக் கதைகள் சொல்லி கொடுத்தல், நல்வழிப்படுத்தல்

அரியநாயகிபுரம் ஊழியங்கள் - Clips

Welcome

Explore the serene village of Pannaivilai today.

Connect

Church news letter need?

info@pannaivilai.in

+91-741 741 4343

Site Designed and Maintained by SilentNight.in © 2025. All rights reserved.