Harvesto'25

பண்ணைவிளை சேகர 130வது அறுப்புக்கால தோத்திரப்பண்டிகை ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பண்ணைவிளை பங்களா கிறிஸ்து ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. 26, 27 சனி ஞாயிறு இருதினங்கள் பைபிள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

27 ம் தேதி காலை 9:30 மணிக்கு பண்ணைவிளை பங்களா கிறிஸ்து ஆலயத்தில் அறுப்புக்கால தோத்திரப் பண்டிகை சிறப்பாக நடைபெற்றது. இதில் அருட்திரு. P.J. குரோவ்ஸ் பர்னபாஸ் (சேகரத் தலைவா், பிரையன்ட் நகர் சேகரம்) கர்த்தருடைய வாா்த்தையை வழங்கி சிறப்பித்தாா்கள்.

13 சபைகளின் மக்கள் உற்சாகமாக பொருட்காணிக்கை படைத்திருந்தாா்கள். ஆராதனை முடிவில் ஆசீர்வாதத் தட்டு, மற்றும் வந்திருந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் மோா், குளிா்பானம் கொடுக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு சிறப்பாக அன்பின் விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சி அனைத்தையும் சேகரத் தலைவா் அருட்திரு. A. ஜாண் வெஸ்லி மற்றும் உடன் ஊழியா்கள் சிறப்பாக செய்திருந்தாா்கள்.

Harvest Festival Invitation 2025
Harvest Festival Invitation 2025

Bible Cricket Winner

பைபிள் கிரிக்கெட் போட்டியில் பண்ணைவிளை சாராள் அணியினர் வெற்றி பெற்றார்கள். முழுவீடியோ கண்டு களியுங்கள். அணித்தலைவா் திருமதி பாப்பா அதிசயராஜ் மற்றும் திருமதி மல்லிகா கோயில்ராஜ் அவர்கள் சிறப்பாக பதிலளித்தாா்கள். உடன் பங்கேற்ற சகோதரிகள் செல்வ புஷ்பா வயலற், ஹெப்சிபா, அனிதா ராஜகுரு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

Saraal Team, Pannaivilai

Bible Cricket Runner

பங்களா குளோரி 2 ஜீசஸ் அணியினர் இறுதிச்சுற்றிலும் வெகு சிறப்பாக பங்களித்தாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அணித்தலைவா் திருமதி சாரா ஜெனிபர் அவா்களுடன் சகோதரிகள் லிட்டா ஜோஸ்லின், சாந்தி பிரியா, சுஜி பிரியா, சவுந்தர்யா ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்தாா்கள்.

Glory to Jesus Team, Pannaivilai Bungalow

Welcome

Explore the serene village of Pannaivilai today.

Connect

Church news letter need?

info@pannaivilai.in

+91-741 741 4343

Site Designed and Maintained by SilentNight.in © 2025. All rights reserved.