பண்ணைவிளை புதூா் மாணிக்கம் நாடார் விதைத்தது பரிசுத்து லூக்கா ஆலய விருட்சமாக எழும்பி நிற்கின்றது!!
பண்ணைவிளை புதூர் மாணிக்கம் நாடார் பாரம்பரிய இந்து குடும்பத்தைச் சார்ந்த, நம் ஊரில் உள்ள தெற்கு தெருவில் உள்ள சாமி கோயில் பூசாரி. இவர் குடும்பத்தில் பல கஷ்டங்கள் இருந்ததால், அவர் தெற்கு தெருவை விட்டு வடக்கு தெருவில் இடம் வாங்கி வீடு கட்டியுள்ளார். கிறிஸ்தவராக மாற வேண்டும் என்று எண்ணி, ரோட்டுக்கும் வடபுறத்தில் தன் பெயரில் 8 செண்டு இடம் வாங்கி, தன் சொந்த செலவில் மண் சுவரினால் ஓலை கூரை வைத்து, தன் சொந்த செலவில் ஒரு ஆலயத்தை கட்டி, அதில் ஆராதனை நடந்து வந்தது. அதன் பிறகு 1967ம் ஆண்டு அந்த கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் திரு. மாணிக்கம் நாடார் மகள் பொன்னம்மாள் அவருடைய கணவர் திரு. K. சாமுவேல் நாடார் இருவரும் சேர்ந்து குடும்பமாக உழைத்து ஆலயத்தை புதுப்பிக்க, வசூல் புக் அடித்து, வசூல் செய்து, அதில் சபையாரும் இணைந்து புதிய ஆலயத்தை கட்டினார்கள். அப்பொழுது பக்கிள் சார் உபதேசியாராக இருந்தார். திருமதி. பொன்னம்மாள் அம்மா வீட்டில் தினமும் மாலை 5.00 மணிக்கு கிராமத்து மக்கள் ஜெபிக்க வருவார்கள்.
அதில் அநேக வியாதியஸ்தர்கள் சுகம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஒரு உண்டியல் உண்டு. அந்த காணிக்கையை வருடம் ஒரு நாள் உபதேசியாரை வீட்டுக்கு அழைத்து, ஜெபித்து உண்டியல் திறந்து அதில் உள்ள காணிக்கைகளை ஆலய செலவிற்கு கொடுத்து விடுவார்கள். ஆலயத்தில் அடிக்கும் மணியை பாளையங்கோட்டையில் வாங்கி அங்கிருந்து தலையில் சுமந்து கொண்டு வந்தார் திரு. மாணிக்கக் நாடார். ஆலய பொறுப்பாளராக திரு. K. சாமுவேல் நாடார் இருந்து, உபதேசியார் இரவு ஆராதனை நடத்த வரவில்லை என்றால் ஆராதனையும் நடத்தி வந்தவர் அவர்தான்.
திரு. K. சாமுவேல் நாடார் மகன் திரு. S. ஜெபராஜ் சிறுபையனாக இருந்தபோது, ஆலய கட்டுமான பணியில் அதிகமாய் வேலை செய்ததால், முதலாவது ஆலய பிரதிஷ்டைக்கு பக்கிள் உபதேசியார் என்றழைக்கப்பட் திரு. ஜோசப் ஆசிரியர் அவர்கள் செலவில் எனக்கு டவுசர், சட்டை வாங்கி கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினார்.
பண்ணைவிளை புதூா் லுாக்கா ஆலய துாண்களாக விளங்கிய காலஞ்சென்ற,
திரு K. சாமுவேல் நாடார்
S. பொன்னம்மாள் குடும்பத்தினர்
அவர்களுக்கு சமர்ப்பணம்
பழைய நினைவுகளை எழுத்து உருவம் கொடுத்தவர்:
திரு. K.S. ஜெபராஜ்
மல்லாங்கிணறு
Phone No : 99942 64452
(மல்லாங்கிணறு கிராமத்தில் வசிக்கும் திரு. K.S. ஜெபராஜ் அவர்கள் - பண்ணைவிளை புதூா் திரு. K.,S. வேதமாணிக்கம் அவர்கள் உடன்பிறந்த தம்பியும், திரு.V. கெர்சோம் அவர்களுடைய சித்தப்பாவும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.)