Mr. P. Ponniah Nadar

Among the cloud-like multitude of faithful witnesses stands one—Mr. P. Ponnaiya. Born to Mr. P. Bhakkiyanathan in the beloved soil of Pannaivilai

REMARKABLE PERSONVILLAGE VIP

Mrs. Greeda Arthur

7/24/20252 நிமிடங்கள் வாசிக்கவும்

white concrete building
white concrete building

மேகம் போன்ற திரளான சாட்சிகளில் ஒருவர்

பா. பொன்னையா அவர்கள். பண்ணைவிளை மண்ணில் P. பாக்கியநாதன் அவர்களுக்கு மகனாக பிறந்தவர். பண்ணைவிளை மண்ணில் ஓடி ஆடி விளையாடிய நாட்கள் நினைவலைகளில் நீங்காதவை. இக்கிராமத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளப்படி பேதுருவைப் போன்று மீன் பிடி தொழிலையும், ஈசாக்கை போன்று விவசாயத்தையும் வாழ்வாதாரமாக கொண்டார்.

பண்ணைவிளை பரி. திரித்துவ ஆலயத்தில் கமிட்டி அங்கத்தினராக செயல்பட்டு, ஆலயத்தைக் குறித்த பக்தி வைராக்கியம் கொண்டார்.

ஆலயத்தை கடந்து போகும் நேரங்களில் தன் நெற்றியில் சிலுவை அடையாளம் போட்டு செல்வதுண்டு. காலையில் எழுந்தவுடன் ஜெபிப்பதும், இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் ஜெபிப்பதும் அவர்கள் வழக்கம்.

பின்னாட்களில், ஒவ்வொரு நாள் சாயங்காலமும் ஆலயத்திற்கு சென்று தனித்து ஜெபித்து வருவது வழக்கம். நேர்முழங்காலில் ஜெபிப்பார்கள்.

கால்கள் தள்ளாடும் சமயத்திலும் ஆலயத்தில் திருவிருந்து ஆராதனையில் திருவிருந்தில் பங்கு பெறுவதற்கு, முன்பு சென்று தான் திருவிருந்து எடுத்து வருவார்கள். ஏனென்றால், ஆண்டவரிடம் நாம் தான் போய் வாங்கி வர வேண்டும் என்பார்கள்.

கடைசி நாட்களில் வேதம் வாசிப்பதும், ஆவிக்குரியப் புத்தகங்களைப் படிப்பதும் அவர்களது பொழுதுபோக்காக மாறினது. எந்த நேரம் பார்த்தாலும் அவர்கள் கையில் வேதம் திறந்தே இருக்கும்.

இறுதிநாளில் வேதத்தை மார்பில் அணைத்துக் கொண்டே படுத்தார்கள். பரமன் மடியில் தலைசாய்த்தார்கள்.

மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள். ஏசாயா 29:11

Among the cloud-like multitude of faithful witnesses stands one—Mr. P. Ponnaiya. Born to Mr. P. Bhakkiyanathan in the beloved soil of Pannaivilai, his childhood was filled with carefree days of running and playing in the village that shaped him. He lived a humble life rooted in this land, embracing the scriptures both in spirit and in deed: like Peter, he pursued fishing; like Isaac, he turned to farming—each as his livelihood.

He served as a committee member of the Pannaivilai Holy Trinity Church, with deep reverence and unwavering dedication. Whenever he passed by the church, he would mark his forehead with the sign of the cross—a gesture of quiet devotion. Prayer was woven into the rhythm of his life: a morning greeting to God and a nightly surrender before sleep.

In his later years, he developed the habit of visiting the church every evening to pray alone—always kneeling in earnest. Even when his legs faltered, he would go ahead of the congregation to receive Holy Communion, saying, "We must go to the Lord to receive it ourselves."

During his final days, reading the Bible and spiritual books became his favorite pastime. At any hour, you’d find the Scriptures open in his hands. On his last night, he lay down with the Bible held close to his heart—and so gently, he rested in the bosom of the Lord.

The humble among men shall rejoice among the holy ones of Israel.
Isaiah 29:11

Peri. Yowan Mr. P. Ponniah

🙏 Kneeling Till the End, at the Foot of Grace

Mr. Ponnaiah was a man whose faith never wavered—not even in the shadow of death. Until his final breath, he knelt in prayer at the church, pouring out his heart before the Lord. With unwavering reverence, he walked to the altar and received Holy Communion, a sacred act he cherished deeply.

His knees may have bent with time, but never his spirit.

  • Testimony about Mr. Ponniah by Vaseeharan John Moses