Mr. J. Rajiah Visuwasam

பண்ணைவிளை ஆலய நிா்வாகத்தில் மிகவும் அறியப்படுகிற காலஞ்சென்ற திரு. ஜெ. இராஜையா விசுவாசம் அவர்களை மறக்க இயலாத ஆசிரியா் மட்டுமன்றி கெம்பீரமான தோற்றத்துடன் அகன்ற மீசை என, இன்றும் என் நினைவில் உள்ளது. அவா்கள் சைக்கிளில் செல்வது பாா்க்க மிக அழகாக இருக்கும். இன்றும் திரு. R. செல்வின் அமிர்தராஜ் ஆசிரியர் அவர்கள் அந்த மிதிவண்டி (சைக்கிள்) பத்திரமாக (பொக்கிஷமாக) பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள்.

REMARKABLE PERSONVILLAGE VIP

Mr.Selwyn Amirtharaj

7/1/2025

worm's-eye view photography of concrete building
worm's-eye view photography of concrete building

My post content

பண்ணைவிளை ஆலய நிா்வாகத்தில் மிகவும் அறியப்படுகிற காலஞ்சென்ற திரு. ஜெ. இராஜையா விசுவாசம் அவர்களை மறக்க இயலாத ஆசிரியா் மட்டுமன்றி கெம்பீரமான தோற்றத்துடன் அகன்ற மீசை என, இன்றும் என் நினைவில் உள்ளது. அவா்கள் சைக்கிளில் செல்வது பாா்க்க மிக அழகாக இருக்கும். இன்றும் திரு. R. செல்வின் அமிர்தராஜ் ஆசிரியர் அவர்கள் அந்த மிதிவண்டி (சைக்கிள்) பத்திரமாக (பொக்கிஷமாக) பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள்.

திரு. ஜெ. இராஜையா அவா்கள் வசித்த பூர்வீகவீடு ஆலய கோபுரத்தின் நிழல் விழும் அருகில் அமைந்த அருமையான ஓட்டுவீடு. வீட்டிலிருந்து கால் வெளியே வைத்தால் அவர்கள் ஆலயத்தின் முன்பகுதியில்தான் வைக்க வேண்டும். அவர்களுக்கும் ஆலயத்திற்கும் வீடு மட்டுமல்ல, வாழ்க்கையும் நெருக்கமான உறவை ஏற்படுத்தியிருந்தது.

பண்ணைவிளை காலஞ்சென்ற திரு. வி. ஜெபமணி அவர்களின் ஒரே குமாரனாக 10.2.1924ஆம் ஆண்டு பிறந்தாா்கள். பண்ணைவிளை ஆலயத்தில் வளா்ந்தாா்கள் என்று சொன்னாலும் பொருந்தும். பண்ணைவிளை பங்களா CMS நடுநிலை பள்ளியில் III Form (தற்பொழுது தக்கா் மேல் நிலைப்பள்ளி) பயின்று, பின்னா் பிஷப் சார்ஜெண்ட் போதனாமுறை பயிற்சி பள்ளியில் (Bishop Sargent Pothana Murai Training Inistitute) ஆசிரியர் பயிற்சி பெற்றாா்கள். அன்றைய நாட்களில் Higher Grade Teacher ஆக ஆசிரியராக, திருநெல்வேலி திருமண்டலம் (ஒருங்கிணைந்த துாத்துக்குடி - திருநெல்வேலி திருமண்டலம்) பள்ளியில் ஆசிரியராக பணியில் இணைந்தாா்கள்.

சாயா்புரம் சர்க்கிளில் ஆசிரியையாக பணி செய்து கொண்டிருந்த எஸ்தா் அவர்களை திரு. இராஜையா அவா்கள் 26.5.1948 அன்று சாயா்புரம் புளியநகா் ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டாா்கள்

நெல்லை திருமண்டலத்தில் ஆசிரியராக இணைந்து பல இடமாற்றங்களுக்குப்பின், சிவகளை இந்து நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி செய்து 1982 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றாா்கள்.

திருமதி எஸ்தா் ராஜையா - அவா்களும் கணவருடன் இணைந்து ஆசிாியராக சிவகளை இந்து நடுநிலைப்பள்ளியில் 1983ல் பணிநிறைவு செய்தாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண வாழ்க்கையில் 3 ஆண் குழந்தை 1 பெண் குழந்தை என கா்த்தா் கொடுத்து ஆசீா்வதித்தாா். தற்பொழுது திரு. இராஜையா ஆசிாியாின் கடைசி மகன் திருநெல்வேலி சாப்டா் மேல்நிலைப்பள்ளியில் பணி செய்து, ஓய்வு பெற்று பாளைங்கோட்டையில் வசித்து வரும் திரு. செல்வின் அமிா்தராஜ் அவா்கள், அவர்களுடைய தந்தை பற்றி தொிவித்த தகவல்களையும், புகைப்படங்களையும் தொகுப்பாக கீழே காணலாம்.

அருட்திரு. Y.C. Navamoni ஐயா அவர்களுடைய அம்மா மற்றும் திருமதி செல்வம் (திரு.ஜே. ராஜையா ஆசிரியருடைய அம்மா) மற்றும் பெரியம்மா (திரு பொன்னையா அவர்கள் அம்மா) 3 பேரும் உடன்பிறந்தவா்கள்.

Life Style @ as a Teacher