yellow sunflower field during daytime

Mr. Athiyanantham David & Mrs. Chandra David

Honoring Our Church Pillars: Mr. & Mrs. Athiyanantham David

VILLAGE VIPREMARKABLE PERSON

Mrs. Chandra David

7/12/20251 நிமிடங்கள் வாசிக்கவும்

Honoring Our Church Pillars: Mr. & Mrs. Athiyanantham David

In the spiritual journey of our church, few names resonate with as much respect and affection as Mr. Athiyanantham David and Mrs. Chandra David. Their unwavering commitment and lifetime of service stand as a testimony to Christian faith in action.

🙏 Mr. Athiyanantham David – Catechist & Retired Educator

A guiding light to many, Mr. David has served as our Catechist with humility, wisdom, and deep devotion. As a retired teacher, his love for learning and teaching continues to shape our spiritual and moral growth. With every sermon, prayer, and moment of counsel, he uplifts our congregation with clarity and compassion.

🖋Mrs. Chandra David – Retired HM, Poet & Ministry Leader

Mrs. Chandra David’s legacy is multifaceted—an inspiring retired Headmistress, a gifted poem writer whose verses speak to the soul, and a tireless coordinator of the Women’s Fellowship and Young Women Association. Her leadership empowers women to walk in faith and purpose. As an elder in our church, she nurtures our fellowship with grace and vision.

Their lives are a beautiful reflection of service, rooted in love and anchored by faith. Together, they have touched generations—both in education and in ministry. We thank God for their presence in our midst, and for the many ways they continue to bless our church family.

பண்ணைவிளை திாித்துவ ஆலய வாழ்த்துப் பாடல்

வாழ்த்துப்பாடல் எழுதியவர் திரு. ஆ. ஆதியானந்தம் டேவிட் – சபை ஊழியர் (86ஆவது ஆண்டுமலா்)

பண்ணைவிளை திருச்சபை வளரட்டும்

பரிசுத்தவான்கள் இங்கே எழும்பட்டும்

குடும்பங்கள் தழைத்தோங்கி செழிக்கட்டும்

குறையில்லா நல்வாழ் வாழட்டும்.

திரித்துவ தேவாலயத்தின் மகிமை மட்டும்

திருச்சபை முழுவதும் பரவட்டும்

திரளாக மக்களுமே பணியட்டும்

திரியேக தேவனையே துதிக்கட்டும்.

அப்பா பிதாவே என்றழைக்கட்டும்

அடிமைத் தன ஆவியை ஒழிக்கட்டும்

அன்பாலே சரித்திரம் படைக்கட்டும்

அப்பாவின் பிள்ளைகளாய் மாறட்டும்

Mr. A. Aathiyanantham David & Mrs. Chandra David

Mr.Athiyanantham David & Mrs.Chandra David
Mr.Athiyanantham David & Mrs.Chandra David

திரித்துவ ஆலயமே

(ராகம்: குதுகலம் நிறைந்த நன்னாள்)

பாடல் எழுதியவர்

திருமதி சந்திரா டேவிட் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்)

திரித்துவ ஆலயமே

தூய தேவனின் ஆலயமே

மூவராம் தேவரீா் வாசம் செய்யும்

மகிமை நிறை ஆலயமே (2)

1. ஒரு நூறு ஆண்டுக்கு முன்

எம் முன்னோர்கள் கட்டினரே

எமை வாழ வைக்ககும் எங்கள் வறுமை போக்கும்

மகத்துவ தேவ ஆலயமே.

2. தாழ்வில் இருந்த எம்மை

தலை நிமிர்ந்து வாழச் செய்தாய்

பாரெங்கும் எம் புகழ் ஓங்கிடவே

பெறும் பேர் பெற்று விளங்கச் செய்தாய்

3. பரிசுத்த ஊழியர்கள்

பலர் எழும்பிட கிருபை செய்தாய்

சுவிசேஷ விதை ஊன்றும் ஜெபக்குழுக்கள்

உருவாக்கி பரவச் செய்தாய்

4. ஐசுவரியம் கனம் மகிமை

யாவும் உன்னாலே வந்ததல்லோ

தாழ்ந்து பணிந்து நின்னை வாழ்த்துகிறோம்

என்றும் வாழிய வாழியவே

5. இந்த சிலாக்கியம் பெற்ற நாங்கள்

பெரும் பாக்கியம் பெற்ற மக்கள்

உன்னை நினைத்திருப்போம் நாங்கள் சுகித்திருப்போம்

தலை முறை தலை முறையாகவே

6. கோலும் கையுமாய் நின்றிருந்தோம்

இரு பிரிவாரங்கள் தந்தீர்

மகிமையின் தேவா உம் வீட்டில் வாழும்

அடைக்கலான் குருவிகளாவோம்

Mr.A. Athiyanantham David

Holy Trinity Church Catechist 2005-2015

Click to Enlarge